டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 6,837 பேர் தயார்
ஈரோடு:துணை கலெக்டர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், உதவி தொழிலாளர் ஆணையர் என குரூப்---1 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு வரும், 27ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 6,837 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்வு அறைக்கும் செல்லும்போது ஹால்டிக்கெட் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.