உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட விரோத குவாரியில் வெடி விபத்து; 2 பேர் பலி

சட்ட விரோத குவாரியில் வெடி விபத்து; 2 பேர் பலி

டி.என்.பாளையம்:ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே ஆதிபெருமாள் கோவில்கரடு என்ற இடத்தில், பெருந்துறையை சேர்ந்த லோகநாதன் மனைவி ஈஸ்வரி பெயரில் கல் குவாரி உள்ளது. உரிமம், 2015ல் முடிந்தும் சட்ட விரோதமாக இயங்குகிறது.இதுகுறித்த புகார் வந்த போதெல்லாம், வருவாய் துறையினர் ஆய்வு செய்து, குவாரிக்கு சீல் வைப்பதும், அதை தொடர்ந்து லோகநாதன் சீலை உடைத்து குவாரியை நடத்துவதும் வாடிக்கையாக உள்ளது. நேற்றிரவு, 8:30 மணிக்கு குவாரியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெடி வைத்து பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் கோபி, அயலுாரை சேர்ந்த செந்தில்குமார், ௫௦, பர்கூர் கர்கேகண்டியை சேர்ந்த அஜித்குமார், ௪௦, உடல் சிதறி பலியாகினர். விபத்தையடுத்து, மற்ற தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். பங்களாபுதுார் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ