உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம்..

வெறிநாய் கடித்து பலியான ஆடுகள் உடலுடன் விவசாயிகள் போராட்டம்..

காங்கேயம்: காங்கேயம் அருகே பகவதிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவர், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்த்து வருகிறார். வேலுசாமி தோட்டத்துக்குள் நேற்று முன்-தினம் இரவில் புகுந்த தெருநாய்கள், செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்ததில் இரு ஆடுகள் பலியாகி விட்டன. /ஆறு ஆடுகள் பலத்த காயமடைந்தன.இந்நிலையில் இறந்த ஆடுகளை, சக விவசாயிகள் உதவியுடன் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்துக்கு, விவசாயி வேலுசாமி நேற்று காலை கொண்டு வந்து, அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தினர். தாசில்தார் மயில்சாமி, பி.டி.ஓ., விமலாதேவி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !