உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகளுக்கு மரக்கன்று வனத்துறை வினியோகம்

பள்ளிகளுக்கு மரக்கன்று வனத்துறை வினியோகம்

பள்ளிகளுக்கு மரக்கன்றுவனத்துறை வினியோகம்ஈரோடு, தமிழக அரசின் 'பசுமை தமிழகம் திட்டத்தில்', ஈரோடு மாவட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலி இடங்களில் மரக்கன்று நடுவதற்கும், மாணவர்களின் வீடுகளில் காலி இடங்களில் நடவும், பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில் மரக்கன்று வினியோகித்துள்ளனர்.இதன்படி மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, 500 மரக்கன்று, வடுகப்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கு, 100, அரச்சலுார் அரசு மேல்நிலை பள்ளிக்கு, 500, அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 630 மரக்கன்று நேற்று வினியோகித்தனர். இயல்வாகை, மகாகனி, புங்கன், வேம்பு, பூவரசு, புளி, அத்தி உள்ளிட்ட மரக்கன்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ