மாசு தடுப்பு குறித்து மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், பெருந்துறை சிப்-காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில், ஒருங்கி-ணைப்பாளர் சின்னசாமி மனு வழங்கி கூறியதாவது:பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் தவறான அணுகுமுறையால், மாதம்தோறும், 5ம் தேதி நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டம் நடத்தப்படுவது தடைபட்டுள்ளது. இக்கூட்டம் நடத்தக்-கோரி நடந்த போராட்டத்தில், 42 பேர் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளனர். அவற்றை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி கடந்த மாதம், 5ல் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவுலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய அறிவித்தோம். ஆனால் ஜூலை, 29ல் கலெக்டர் முன்னிலையில் அமைச்சர் முத்-துசாமி நடத்திய கூட்டத்தில், மாதம்தோறும், 5ம் தேதி நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டம் நடத்தப்படும், என்றனர். 42 பேர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற நடவடிக்கை எடுப்ப-தாக, அமைச்சர் தெரிவித்திருந்தார். தவிர, பெருந்துறை சிப்காட் வளாகத்தில், 40 கோடி ரூபாயில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தவும், அவ்வளா-கத்தில் தேங்கி உள்ள, 60,000 டன் கலப்பு உப்புகளை அகற்-றவும் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை நேரடி கலந்தாய்வு கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. எனவே கடந்த காலங்களில் நடத்தியது-போல, மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 5ல் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.