அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
டி.என்.பாளையம் ; டி.என்.பாளையம், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கள்ளிப்-பட்டியில் நேற்று நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்-டையன் அடையாள அட்டை வழங்கி பேசியதாவது:காவிரி நதிநீர் விவகாரத்தில் தற்போதைய தி.மு.க., அரசு, தண்-ணீரை பெற முடியாத அரசாக உள்ளது. காவிரி விவகாரம் குறித்து பேச அம்மாநில முதல்வரை, தி.மு.க.,வினர் சந்திக்கவில்லை. விவசாயிகள் சிந்தும் கண்ணீரை, இயற்கைதான் துடைத்து கொண்-டுள்ளது. தி.மு.க., அரசு இதுவரை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. டேப் வழங்குவதாக தெரிவித்து, அதையும் வழங்கவில்லை. இவ்வாறு பேசினார். கள்ளிப்பட்டி, பங்களா-புதுார், பெருமுகை, கொண்டயம்பாளையம் பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள், அடையாட அட்டை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரி பாஸ்கர் செய்தார்.