விபத்தில் மாமியார், மருமகள் பலி மகனுடன் தந்தை பலத்த காயம்
காங்கேயம்: ஊதியூர் அருகே, புளியமரத்தில் கார் மோதியதில், மாமியார், மருமகள் பலியாகினர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பழையகோட்டை ரோடு, போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மனைவி பாக்யலட்சுமி, ௫௫; இவர்களின் மகன் மதிவாணன், 28, ஐ.டி., நிறுவன ஊழியர். இவரின் மனைவி ராகவர்த்தினி, 26; இவர்களின் மகன் ஆதித், 1; தாராபுத்தில் உள்ள ராகவர்த்தினி வீட்டுக்கு நான்கு பேரும் காரில் நேற்றிரவு, ௭:௦௦ மணியளவில் சென்றனர். காரை மதிவாணன் ஓட்டிச் சென்றார்.காங்கயம்-தாராபுரம் ரோட்டில் ஊதியூரை அடுத்த குட்டைக்காடு பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். ஊதியூர் போலீசார் அப்பகுதி மக்களுடன் இணைந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ராகவர்த்தினி, பாக்யலட்சுமி பலியாகி விட்டது தெரிந்தது. மதிவாணன், குழந்தை ஆதித்தை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதலி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் இருவர் பலி, இருவர் பலத்த காயமடைந்தது ஊதியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.