உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆர்ப்பாட்டம்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு, திண்டலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன், மாவட்ட தலைவர் கலாவதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட துணை தலைவர் கஸ்துாரி, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் அகிலேஷ்வரன், அமைப்பு செயலாளர் பிரபு கோரிக்கை குறித்து பேசினர். தமிழகத்தில் தினக்கூலி அடிப்ப-டையில் பணி செய்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியா-ளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மலர்விழி சந்திரலேகா, கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ