மேலும் செய்திகள்
பனை விதை நடும் பணி
30-Aug-2024
பனை விதைகள் சேகரிக்கும்பணியில் அதிகாரிகள் தீவிரம்ஈரோடு, செப். 8-தமிழகத்தில் காவிரி கரையோர பகுதிகளில், 1 கோடி பனை விதை நடும் பணியானது, ராமேஸ்வரத்தில் ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை ஈரோடு உள்பட எட்டு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., துாரத்துக்கு பனை மரம் நடும் பணி தொடங்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியானது, வரும், 14ம் தேதி தொடங்குகிறது. ஒரு வாரமே உள்ளதால் பனை விதைகளை சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல் வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகளும், விவசாயிகளை அணுகி பனை விதை சேகரித்து வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் பனை விதைகளை சேகரிக்கும் பணி மேற்கொண்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30-Aug-2024