பர்கூர் மலையில் விபத்து கர்நாடகா டிரைவர் பலி அத்தாணி டிரைவர் சீரியஸ்
பர்கூர் மலையில் விபத்துகர்நாடகா டிரைவர் பலிஅத்தாணி டிரைவர் சீரியஸ்அந்தியூர், ஆக. 25-கர்நாடகா மாநிலம் ஹனுாரை சேர்ந்த சிவராஜ், 28; ஹனுாரில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு, ஈரோடு மார்க்கெட்டுக்கு ஈச்சர் வேனில் புறப்பட்டார். அதேசமயம் அத்தாணி, குப்பாண்டபாளையத்தை சேர்ந்த மணி, 56, சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடகா மாநிலம் ஹனுார் நோக்கி டாரஸ் லாரியில் கிளம்பியுள்ளார். இரு வாகனமும் பர்கூர் - கர்ககேண்டி சாலையில், தட்டக்கரை அரசு பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஈச்சர் வேன் டிரைவர் சிவராஜ் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த டாரஸ் லாரி டிரைவர் மணி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.