உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / . தவறான புகாரில் பள்ளி ஆசிரியர் கைது விடுவிக்க கோரி கலெக்டரிடம் மனு

. தவறான புகாரில் பள்ளி ஆசிரியர் கைது விடுவிக்க கோரி கலெக்டரிடம் மனு

ஈரோடு: ஈரோடு அருகே கொங்கம்பாளையத்தில் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தவர் அலாவுதீன். பள்ளி மாணவனுக்கு வாட்ஸ் ஆப்பில், பாலியல் தொல்லை மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.இதனால் பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்-நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்த மக்கள், குழந்தைகளின் பெற்றோர், கலெக்டர் அலுவல-கத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: கருங்கல்பா-ளையம் ஜெயகோபால் வீதியில், 17 ஆண்டாக டியூஷன் சென்டர் நடத்தி, ஏழைகளுக்கு ஆசிரியர் அலாவுதீன் உதவி வருகிறார். தவ-றான புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதால், குடும்பத்தார் மட்டுமின்றி, பள்ளி குழந்தைகள், டியூஷன் சென்-டரில் படித்து வந்த, 170க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பாதித்-துள்ளனர். கலெக்டர் இதுபற்றி விசாரித்து, அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்யவும், அவரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை