உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீடுகளுக்கு புது குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம்

வீடுகளுக்கு புது குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம்

சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் நடந்தது. செயல் அலு-வலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சவுந்த-ரராஜன் உட்பட வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி சாலைகளில், 10 டன் எடைக்கு மேல் வாகனங்கள் செல்லக்கூடாதென பெயர் பலகை வைக்க வேண்டும். சென்னி-மலை நகரப்பகுதியில், அனைத்து வார்டுகளில் உள்ள வீடுக-ளுக்கும், புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பேரூ-ராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான உர பூங்கா ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்பட, 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை