உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேலம், நாமக்கல், கரூர், ஈரோடில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

ஈரோடு:ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகமாக மரவள்ளி கிழங்கு சாகுபடியாகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு, இவற்றை வாங்கி செல்வர். அக்., முதல் பிப்., வரை சீசன் நேரம். தற்போது சீசன் இல்லாததால், குறைந்த அளவு மரவள்ளி கிழங்கு வந்தாலும், தரமாக உள்ளதால் உணவு, சிப்ஸ் உற்பத்திக்கு அதிகமாக வாங்கி செல்கின்றனர். ஆனால், சேகோ ஆலைகளில் வாங்காததால், விலை குறைந்துள்ளது.சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:கடந்தாண்டு விளைச்சல் அதிகம் என்பதுடன், 1 டன் மரவள்ளி கிழங்கு, 14,000 ரூபாய் வரை விற்பனையானது. நடப்பாண்டு, ஒரு மாதத்துக்கு மேலாக 1 டன், 8,000 ரூபாயாகவே நீடிக்கிறது.மரவள்ளி கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஸ்டார்ச் மாவு, 90 கிலோ மூட்டை, 4,000 ரூபாயில் இருந்து, 3,200 ரூபாயாகவும், 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை, 5,200 ரூபாயில் இருந்து, 4,400 ரூபாயாகவும் குறைந்து உள்ளது. ஓணம், தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையிலும் விலை உயரவில்லை.ஸ்டார்ச் மாவுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பதால், 3,200 ரூபாயில், 400 ரூபாய் ஜி.எஸ்.டி.,யில் பிடித்தமாகிறது. எனவே, ஜி.எஸ்.டி., வரி விதிப்பை நீக்க வேண்டும்.மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 10,000 ரூபாய் என்ற விலையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்து, கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். இதனால், மக்காச்சோளம், கரும்பு, மஞ்சள் போன்ற பிற பயிர்களுக்கு விவசாயிகள் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி