உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கு கைத்தறி, பெடல் தறியில் வேட்டி, சேலை தயாரிக்க திட்டம்

முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கு கைத்தறி, பெடல் தறியில் வேட்டி, சேலை தயாரிக்க திட்டம்

ஈரோடு: முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு வழங்க, 24 லட்சம் வேட்டி, 32 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்ய உள்ளனர்.கைத்தறி மற்றும் துணி நுால் துறை மூலம், மொத்தமாக ஆர்டர் வழங்கி, கைத்தறி, விசைத்தறி, பெடல் தறிகளில் உற்பத்தி செய்து, கோ-ஆப்டெக்ஸ் மூலம் உரிய மாவட்டங்களுக்கு சென்று வருவாய் துறை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் பயனா-ளிகளுக்கு சென்றடையும்.வரும், 2025 பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 கோடியே, 77 லட்சத்து, 64,476 சேலைகள், 1 கோடியே, 77 லட்-சத்து, 22,995 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.இவற்றை முழுமையாக விசைத்தறியில் உற்பத்தி செய்யவும், முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கான வேட்டி, சேலையை கைத்தறி மற்றும் பெடல் தறி மூலம் மட்டுமே உற்-பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கைத்தறி துறை அதிகாரிகள் கூறியதாவது:பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு எண்ணிக்-கையுடன் உத்தரவு வழங்கப்பட்டு, 100 கோடி ரூபாய் விடுவிக்-கப்பட்டு, நுால் டெண்டர் பணி நடந்து வருகிறது. சில நாளில் உற்பத்தி பணி துவங்கும்.அதேநேரம் முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என இருமுறை இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இதற்காக மாநில அளவில் ஒவ்வொரு முறையும், 12 லட்சம் வேட்டி, 16 லட்சம் சேலை வழங்கப்-படும். இவை முற்றிலும் கைத்தறி மற்றும் பெடல் தறி மூலம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். மாநில அளவில், 78,000 கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் ஈரோடு, சேலம், நாகர்-கோவில் உட்பட பல மாவட்டங்களில் பயன் பெறுவார்கள்.கடந்த ஆண்டுகளைவிட நடப்பாண்டு கூடுதல் நா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ