மாநகராட்சி பள்ளிக்கு மின் விசிறி வழங்கல்
ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், ரோட்டரி மிட் டவுன் சார்பில் நடந்த நிகழ்வில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று மின் விசிறி, மிக்சி பள்ளிக்கு நன்-கொடையாக வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா தலைமை வகித்தார். 34வது வார்டு தி.மு.க., செயலர் திருநாவுக்கரசு, ஈரோடு ரோட்டரி மிட் டவுன் தலைவர் தங்கவேலு, செயலாளர் வாசிப் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். ரோட்டரி மிட் டவுன் உறுப்பினர்கள் மோகன சுந்தரம் வடிவேல், சுப்ரமணியம், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியை லதா நன்றி கூறினார்