உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர்கள் மோதலில் வாலிபர் சாவு

டூவீலர்கள் மோதலில் வாலிபர் சாவு

சென்னிமலை : -திண்டுக்கல் மாவட்டம் பழநி, வசந்தம் நகரை சேர்ந்தவர் பிரசன்னா, 35; ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலைக்கு, பைக்கில் வந்தார். எதிரே காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையத்தை சேர்ந்த பூபதி, 33, பைக்கில் வந்தார். ஈங்கூர் அருகே இருவரின் டூவீலர்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரசன்னா இறந்தார். தனியார் மருத்துவமனையில் பூபதி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை