உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் வேருடன் சாய்ந்த மரத்தால் மூன்று கார் சேதம்

கோபியில் வேருடன் சாய்ந்த மரத்தால் மூன்று கார் சேதம்

கோபி: கோபி அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் ஷேர் அலி, 45; கார் மெக்கானிக். கடை அருகே சாலையோரத்தில் இருந்து ஒரு புளியமரம் நேற்று காலை, 6:00 மணிக்கு வேருடன் சாய்ந்தது. கார் பட்டறை முன் நிறுத்தியிருந்த கார்கள் மீது மரம் விழுந்தது. கோபி நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் மூலம் மரத்தை அகற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் மரம் விழுந்ததில், மூன்று கார்கள் சேதமாகி விட்டதாக, ஷேர் அலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !