உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்களுக்கு இடையே சிக்கி டி.வி., ஒளிப்பதிவாளர் பலி

பஸ்களுக்கு இடையே சிக்கி டி.வி., ஒளிப்பதிவாளர் பலி

ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், அசோகபுரியை சேர்ந்தவர் ஜெயக்-குமார், 45, கிருஷ்ணா டி.வி., ஒளிப்பதிவாளர். திருமணம் ஆகா-தவர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அலுவல-கத்துக்கு செல்ல ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டுக்கு நேற்று காலை வந்தார்.நாமக்கல் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு அருகில் நின்ற தனியார் பஸ், அரசு பஸ் இடையில் நடந்து சென்றார். அப்போது வந்த மற்றொரு தனியார் பஸ், ஏற்கனவே நின்ற தனியார் பஸ் மீது மோதியது. இதனால் அந்த பஸ் நகர்ந்து முன்புறம் நின்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் இரு பஸ்களுக்கிடையே சென்ற ஜெயக்குமார், நடுவில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கி-ருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை