உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.வி., ஒளிப்பதிவாளர் பலி பஸ் டிரைவரிடம் விசாரணை

டி.வி., ஒளிப்பதிவாளர் பலி பஸ் டிரைவரிடம் விசாரணை

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த, கிருஷ்ணா டி.வி., ஒளிப்பதிவாளர் ஜெயக்-குமார், 45: நேற்று முன்தினம் காலை ஈரோடு பஸ் ஸ்டாண்டில், நாமக்கல் பஸ்கள் நிற்கும் ரேக்கில் நின்றிருந்தார். தனியார்-அரசு பஸ்களிடையே நடந்து சென்றபோது, ஈரோடு-துறையூர் செல்லும் ஸ்ரீபாலகிருஷ்ணா தனியார் பஸ், ஏற்கனவே நின்றிருந்த தனியார் பஸ் மீது மோதியது. அப்போது அந்த பஸ் நகர்ந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய ஜெயக்குமார் படுகாயமடைந்ததில் பலியானார். ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவரான, திருச்சியை சேர்ந்த குமார், 42, மீது வழக்குப்ப-திவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ