மேலும் செய்திகள்
சைக்கிளில் சென்றவர் பஸ் மோதியதில் பலி
27-Jul-2026
சத்தியமங்கலம்:பாண்டியாறு-மோயாறு திட்டத்தை இணைக்க வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம் புதுவடவள்ளியில் நடைபயணம் நேற்று நடந்தது. செயலாளர் சுரேந்தர் தலைமை வகித்தார். நீரேற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் சின்னராஜ் துவக்கி வைத்தார். வடவள்ளியில் தொடங்கி கொமராபாளையம் ஜி.ஹெச்., பஸ் நிறுத்தத்தில் முடிவுற்றது. பவானி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் நடராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் சிவக்குமார் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
27-Jul-2026