உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போட்டி தேர்வு கருத்தரங்கில் போர் ; வீடியோ கேம் ஆடிய மாணவர்கள்

போட்டி தேர்வு கருத்தரங்கில் போர் ; வீடியோ கேம் ஆடிய மாணவர்கள்

அந்தியூர் : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான போட்டி தேர்வுக்கான கருத்தரங்கு, அந்தியூர் அருகே பச்சாம்பாளையத்தில் நேற்று நடந்தது. இதில் அந்தியூர், பவானி, டி.என்.பாளையம், கோபி, ஆப்பக்கூடல், சத்தி பகுதிகளை சேர்ந்த ஆறு தனியார் கல்லுாரிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பேசினர். அமைச்சர்கள் விளக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பேசிக்கொண்டிருந்த நிலையில், கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள், கண்ணும் கருத்துமாக மொபைல்போனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. இதுகுறித்து சில மாணவர்களிடம் கேட்டபோது, 'போட்டி தேர்வுக்கான கருத்தரங்கு என்றாலும், இரு அமைச்சர்கள் மட்டுமே பேசினர். போட்டி தேர்வுகளை எதிர் கொள்வது குறித்து அதற்கான நிபுணர்கள், ஆலோசகர்கள் யாரும் வரவில்லை. போர் அடித்ததால், பலர் மொபைல்போனில் கேம் விளையாடினர்' என்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற கருத்தரங்கை பெயரளவுக்கு நடத்தாமல், உரிய நிபுணர்கள், ஆலோசகர்களையும் பங்கேற்க செய்வது, முழு பலனை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சின்ன சுடலை ஈர வெங்காயம்
மார் 07, 2025 08:50

(மங்குனி) அமைச்சர்கள் விளக்கமாகவும் உணர்வுபூர்வமாக பேசினர். இது கிண்டல் தானே.


முக்கிய வீடியோ