மேலும் செய்திகள்
மனைவி மாயம்: கணவன் புகார்
28-Aug-2024
மகனுடன் மனைவி மாயம்கணவன் போலீசில் புகார்ஈரோடு, செப். 15-ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி, சாவடிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 3௪; இவரின் மனைவி தேன்மொழி, 24; தம்பதிக்கு நான்கு, ஒரு வயதில் இரு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ராமசாமி வெல்டிங் வேலை செய்கிறார். கடந்த, 12ம் தேதி ராமசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி, இளைய மகனை காணவில்லை. உடல் நிலை சரியில்லாததால் மனைவி அழைத்து சென்றதாக தகவல் கிடைத்தது. வெகு நேரமாகியும் வராததால் மனைவியின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. மொடக்குறிச்சி போலீசில் ராமசாமி அளித்த புகாரின்படி, போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோடு, ஈஞ்சம்பள்ளி, க.மின்னப்பாளையம் காலனியை சேர்ந்த சுப்ரமணி மகள் தேவயானி, 24; பெருந்துறை சிப்காட் ஊழியர். திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், வீட்டில் இருந்தார். கடந்த, 10ம் தேதி காலை, அவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், தேவயானி மட்டும் வீட்டில் இருந்தார். மதியம் சுப்பிரமணி வீட்டுக்கு வந்தபோது மகளை காணவில்லை. சுப்ரமணி புகாரின்படி மலையம்பாளையம் போலீசா,ர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28-Aug-2024