உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

சத்தியமங்கலம்: கடம்பூர் அடுத்த பவளகுட்டை கீழுரை சேர்ந்தவர் கூலி தொழி-லாளிமாதேஷ். இவரது மனைவி ரேவதி, 23. நிறை மாத கர்ப்-பிணி, நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டதால், கடம்பூர் 108 ஆம்புலன்ஸில் ரேவதியை ஏற்றி, சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கே.என்.,பாளையம் அருகே வரும் போது பிரசவ வலி அதிகரித்தது. இதையறிந்த ஆம்-புலன்ஸ் டிரைவர் அரப்புளிசாமி, வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் விஜய் பிரசவம் பார்த்தார். நள்ளிரவில் ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாய், குழந்தையை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். துரிதமாக செயல்பட்டு மலை கிராம பெண்ணுக்கு பிர-சவம் பார்த்த மருத்துவ உதவியாளர் விஜய், ஆம்புலன்ஸ் டிரைவர் அரப்புளிசாமி, ஆகியோரை பொது மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை