நவ.,1ல் கிராமசபை
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் நவ., 1ல் உள்ளாட்சி தினத்தன்று காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. இடம், நேரம், ஆகியவை, தொடர்புடைய பஞ்., சார்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும்.பஞ்., நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் நடவடிக்கை, கொசு தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.