10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
10 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்காங்கேயம், நவ. 12-காங்கயம் நகராட்சி ஆணையர் பால்ராஜ், தலைவர் சூர்யபிரகாஷ், தினசரி சந்தை வளாகம் மற்றும் திருப்பூர் சாலையில் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என, 10 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள், கவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். மூன்று முறைக்கு மேல் விதிமீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.