உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தை தாக்கி 10 ஆடுகள் பலி

சிறுத்தை தாக்கி 10 ஆடுகள் பலி

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே, சிறுத்தை தாக்கியதில், 10 ஆடுகள் இறந்தன.சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையம் அருகே பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தாயி, 55. இவர், பட்டியில் அடைத்து வைத்திருந்த, 10 வெள்ளாடுகளை நேற்று முன்தினம் நள்ளிரவு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கடித்து தாக்கியதில் இறந்தது. நேற்று காலை மேய்ச்சலுக்கு ஆடுகளை திறந்து விட சென்றபோது, ஆடுகள் கழுத்தில் கடி பட்டும், பாதி உடலை தின்று மீதி உடல் சிதறியும் கிடந்தது. சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரணை செய்ததில், சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. ஒரு ஆட்டை, சிறுத்தை வனப்பகுதிக்குள் இழுத்து சென்று சாப்பிட்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டது. பின்பு இறந்த ஆடுகளை வன கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற்கூறாய்வு செய்த பின், குழி தோண்டி புதைத்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின்படி, உடனடியாக இழப்பீட்டு தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை