உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 100 மெ.டன் பட்டாசு குப்பை துாய்மை பணியாளர்கள் அகற்றம்

100 மெ.டன் பட்டாசு குப்பை துாய்மை பணியாளர்கள் அகற்றம்

100 மெ.டன் பட்டாசு குப்பை துாய்மை பணியாளர்கள் அகற்றம்கரூர், நவ. 3-கரூரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.தமிழகத்தில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் அக்., 30- இரவு முதலே தெருக்களில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அந்த வகையில், கரூர் மாநகராட்சி முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசுகளின் குப்பை கழிவுகள் வீதிகளில் குவிந்து கிடந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் பட்டாசு குப்பை சாலைகளில் நிரம்பியிருந்தது.இதை அகற்றும் பணியில், 409க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நாளொன்றுக்கு வழக்கமாக, 110 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படும் நிலையில், பட்டாசு வெடித்ததில் கூடுதலாக குப்பை குவிந்திருந்தது. குப்பையை பாதுகாப்பாக தரம் பிரித்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அள்ளி சென்றனர்.அந்த வகையில், கரூர் மாநகராட்சி தீபாவளி முதல் நாளில் இருந்து, நேற்று முன்தினம் வரை பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளன. இதில், கரூர் 1வது மண்டலத்தில், 25 மெட்ரிக் டன், 2வது மண்டலத்தில், 30 மெட்ரிக் டன் , 3வது மண்டலத்தில், 25 மெட்ரிக் டன், 4வது மண்டலத்தில், 20 மெட்ரிக் டன் என மொத்தம், 100 மெட்ரிக் டன் பட்டாசு கழிவு குப்பை அகற்றப்பட்டன.மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்பட்ட பட்டாசு குப்பை, தரம் பிரிக்கப்பட்டு வாங்கலில் உள்ள மாநகராட்சி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ