ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் பாதுகாப்பில் 102 போலீசார்
ஈரோடு, ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் இன்று தொடங்கி செப்.,7ம் தேதி வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட, 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர். முகாம் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிக்காக, ஒரு ஏ.டி.எஸ்.பி., நான்கு டி.எஸ்.பி.,க்கள், நான்கு இன்ஸ்பெக்டர் என, 102 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 7ம் தேதி வரை சுழற்சி முறையில் இவர்கள் பணியில் இருப்பர். இதேபோல் முகாமை நடத்தி முடிக்க, 140 ராணுவ வீரர்களும் வந்துள்ளனர்.