மேலும் செய்திகள்
ஈரோட்டில் நேற்று 104 டிகிரி வெயில்
27-Apr-2025
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில் வாட்டியது. மேகமூட்டம், காற்று இல்லாததால் வெப்பம் அனலாக தகித்தது.மாலை, 5:00 மணிக்கு முன்னதான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, 104.2 டிகிரி வெயில் பதிவானது. இது பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.3 முதல், 3.8 டிகிரி வரை அதிகமாகும்.* பர்கூர்மலையில் உள்ள தாமரைக்கரை, ஈரட்டி, கடைஈரட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம், 2:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது.அரை மணி நேரம் அதே வேகத்தில் பெய்தது. மாலை, 4:௦௦ மணிக்கு பிறகு வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதி, கொண்டை ஊசி வளைவு சுற்று வட்டார வனப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
27-Apr-2025