உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்ட ஜி.ஹெச்.,சில்10,500 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

ஈரோடு மாவட்ட ஜி.ஹெச்.,சில்10,500 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு மாதங்களில், 10,534 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.ஈரோடு அருகே சோலாரில் நாய் கருத்தடை மையம் உள்ளது. இங்கு தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறுத. பராமரிப்புக்கு பிறகு பிடிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் விட்டு செல்கின்றனர். அதேசமயம் மாநகர், மாவட்டத்தில் நாய்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் ஊசி செலுத்தி கொள்வது, தொடர் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.இதுபற்றி ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா கூறியதாவது: ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆக., மாதம் தெருநாய்கள் கடித்து, 1,503 பேர் தடுப்பூசி உட்பட சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 69 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. நடப்பாண்டு ஜன., முதல் ஆக., வரை, 10,534 பேருக்கு நாய்க் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். கால்நடைத்துறையினர் கூறுகையில், சோலாரில் உள்ள நாய் கருத்தடை மையத்தில், கடந்த நான்காண்டுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, வெறிநோய் தடுப்பூசி, 23,800 செலுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை