உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நொய்யல் வனம் நிகழ்ச்சியில் 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்

நொய்யல் வனம் நிகழ்ச்சியில் 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே குட்டப்பாளையம் கிராமத்தில், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் நொய்யல் வனம் நிகழ்ச்சியில், 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார்.திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் சிவசேனாபதி சாமிநாதன், வனத்துக்குள் திருப்பூர் தலைவர் சிவராமன், திரைப்பட இயக்குனர் ஹாமீதாசமீம், கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாகி பிரியதர்ஷினி, தி.மு.க., சுற்றுச்சூழல் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் நாளில், 57 வகையான 6,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறுகையில்,'' கடந்த 20 ஆண்டுகளில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வெப்ப நிலையை குறைக்கும் வழிமுறைகளை மாநில திட்டக்குழு வகுத்து அரசிடம் சமர்பித்துள்ளது. அதில் வெப்பத்தை குறைக்க முக்கிய வழியாக மரங்களை வளர்க்க வேண்டும். தமிழகத்தில் தற்போது பெருகி வரும் தெருநாய் பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு திட்டக்குழு சார்பில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி