உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 15 மி.மீ., மழை பதிவானது. வரட்டுபள்ளம் அணையில், 4.80 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை. குறிப்பாக ஈரோடு மாநகரில், கோடையை போன்று வெயில் சுட்டெரித்து வருவது மக்களை கவலை அடைய செய்துள்ளது.* ஈரோடு நகரில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், மாலை, 3:00 மணியளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து வெட்டுக்காட்டு வலசு, போஸ்டல் நகர், சம்பத் நகர், பெருந்துறை ரோடு, பஸ் ஸ்டாண்ட், மூலப்பாளையம், கொல்லம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை