உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 156 மி.மீ., மழை

ஈரோட்டில் 156 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பல இடங்களில், இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாநகரில், 156 மி.மீ., மழை பெய்துள்ளது.பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-94, பவானி-72, குண்டேரிப்பள்ளம்-57, பவானிசாகர் அணை-56.2, சென்னிமலை-52, பெருந்துறை-51, கொடுமுடி-33.4, நம்பியூர்-24, கவுந்தப்பாடி-21.6, அம்மாபேட்டை-21.2, வரட்டுப்பள்ளம் அணை-20.6, கோபி-19.2, இலந்தைகுட்டைமேடு-15.6, தாளவாடி-15.2, கொடிவேரி அணை-13.2, சத்தியமங்கலம்-9. நேற்று காலை மாநகர், மாவட்டத்தில் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி