உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு பஸ் ஸ்டாண்டில் 170 வாகனங்களுக்கு அபராதம்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் 170 வாகனங்களுக்கு அபராதம்

ஈரோடு: விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு ஈரோடு பஸ் ஸ்டாண்டில் டூ-வீலர், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனாலும் பலர் தடையை மீறி பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர், கார்களில் வருகின்றனர். ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார், பஸ் ஸ்டாண்டில் நேற்று முன் தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி வந்த, 80 டூவீலர், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். நேற்றும் காலை முதல் மதியம் வரை பஸ் ஸ்டாண்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, 90 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை