உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைதி தப்பிய விவகாரம் 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்

கைதி தப்பிய விவகாரம் 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்

ஈரோடு: வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷன் ஏட்டுகளான பாரதி, கலை-மணி ஆகியோர், மொபைல்போன் டவரில் ஒயரை அறுத்து கைதான பெங்களூருவை சேர்ந்த ரூபிகான், 35, என்பவரை, கடந்த, 26ல் ஈரோடு விரைவு நீதிமன்றம் எண்-1ல் ஆஜர்படுத்-தினர். பிறகு பெருந்துறை கிளை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். செல்லும் வழியில் பெருந்துறையில் ஒரு ஓட்டலில் ரூபிகானை சாப்பிட வைத்தனர். அப்போது கை கழுவ சென்றவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கைதி தப்பிய விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த ஏட்டுகள் பாரதி, கலைமணியை, எஸ்.பி., ஜவகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ