உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 பேரின் உடல் தானமாக வழங்கல்

2 பேரின் உடல் தானமாக வழங்கல்

ஈரோடு, : ஈரோடு, சூரம்பட்டி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 80; வணிகர். மனைவி லட்சுமி, பாலஜெகநாத், ரஜினிகாந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். வயது முதிர்வால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடலை ஈரோட்டுக்கு கொண்டு வந்தனர். இறுதி சடங்கு செய்யும் நிலையில், உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானமாக அளிக்க, அவர் தெரிவித்திருந்ததாக மனைவி லட்சுமி, மகன்களிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடலை தானமாக வழங்கினர்.* ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் ராமானுஜம், 88; நேற்று முன்தினம் வயது முதிர்வால் இறந்தார். அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பே உடல் தானம் செய்ய எழுதி வைத்திருந்தார். இதன்படி அவரது உடலும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை