2 போலீசாரின் ரூட்டை மாற்றிய பஸ்
ஈரோடு,ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கடந்த, 3ல் ஈரோடு-திருப்பூர் வழிதடத்தில் பஸ்சை இயக்குவது குறித்து தனியார், அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்னையை விசாரிக்க சென்ற ஈரோடு டவுன் எஸ்.எஸ்.ஐ., எபிநேசர், ஏட்டு அன்பரசு, தனியார் பஸ்சை எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்க எடுத்து சென்றனர். இது தொடர்பாக எஸ்.பி., சுஜாதாவுக்கு புகார் சென்றது. உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லாமல், வழக்கு பதியாமல் தனியார் பஸ்சை எடுத்து வந்ததாக, இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.