2 களவாணிகள் கைது27 ஆடுகள் பறிமுதல்
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில், ஆடு திருட்டு போவது அடிக்கடி நடந்தது. இது தொடர்பான புகாரின்படி புளியம்பட்டி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேவை மாவட்டம் மேட்டுப்பாளையம், டேங்க் மேடு சத்தியமூர்த்தி, 42, ரமேஷ்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட, 27 ஆடுகளை மீட்டனர். கட்டட தொழிலாளிகளான இருவரும், பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் ஆடு திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.