உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,077 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், இயந்திரம் பறிமுதல்

2,077 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், இயந்திரம் பறிமுதல்

ஈரோடு,:ஈரோடு மாநகராட்சி, மண்டலம்-1, வார்டு எண்: 4க்கு உட்பட்ட ஸ்ரீபுரம் பகுதியில் கடந்த, 5 மாதத்துக்கு முன் ஜித்துசிங் என்பவர், ஒரு குடோனை வாடகைக்கு எடுத்தார். அங்கு, இரு இயந்திரங்களை அமைத்து, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தயாரித்து, விற்பனை செய்து வந்தார்.தகவல் அறிந்து, மாநகராட்சி மண்டலம்-1 உதவி ஆணையர் சரோஜாதேவி மற்றும் அதிகாரிகள், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அங்கு சோதனையிட்டனர். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உற்பத்தி செய்வதை உறுதி செய்தனர். விற்பனைக்கு தயாராக வைத்திருந்த, 2,077 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கவர்கள், இரு இயந்திரங்களை பறிமுதல் செய்து, மின் இணைப்பை துண்டித்து, அந்த குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ