உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட28 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முன்தினம் இரவு ஆந்திரா மாநிலம் டாடா நகர் - கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பார்ம்-2ல் வந்து நின்றது.ஈரோடு ரயில்வே போலீசார், ரயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனையிட்டனர். ரயிலின் பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனையிட்டனர். அதில், 28 கிலோ எடை கொண்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த பேக்குக்கு யாரும் உரிமை கோரவில்லை. அந்த பேக்கை கைபற்றிய ரயில்வே போலீசார், 28 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை, ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை