மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் துவங்கியது கந்தசஷ்டி விழா
03-Nov-2024
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று யாக பூஜை, ஹோமங்கள், பூர்ணா-குதி நடந்தது. இதை தொடர்ந்து, 108 வகை திரவியங்களுடன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்-டது. தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் பூஜை-களை நடத்தினார். *கோபி பச்சமலையில், இரண்டாம் நாள் சஷ்டி விழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. சிறப்பு ஹோமம், அபி-ஷேகம், ஆராதனை, சண்முகர் அர்ச்சனை நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், இரண்டாம் நாளான நேற்று யாக சாலை பூஜை நடந்தது. இரு கோவில்களிலும் திர-ளான பக்தர்கள் பங்கேற்றனர்.
03-Nov-2024