உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க.,வில் இணைந்த 300 பேர்; அ.தி.மு.க.,வில் அதிர்ச்சி

தி.மு.க.,வில் இணைந்த 300 பேர்; அ.தி.மு.க.,வில் அதிர்ச்சி

தாராபுரம் தாராபுரத்தில், 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர், தி.மு.க.,வில் சேர்ந்தனர்.தாராபுரத்தில் நேற்று நடந்த நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜன், அமராவதி அணை பாசன வாய்க்கால் சங்க முன்னாள் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் புஷ்பா சின்னச்சாமி, கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமையிலான அ.தி.மு.க.,வை சேர்ந்த, 316 பேர், தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் பத்மநாபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க.,வில் பரபரப்புதாராபுரத்துக்கு வரும், 11ம் தேதி, பொது செயலர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்துக்கு வரவுள்ள நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை