மேலும் செய்திகள்
பாசனத்துக்கு நீர் திறப்பு
21-Oct-2024
ஈரோடு: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கடந்தாண்டு, ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பகுதியில், 24,613 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் ஏக்கருக்கு, 3,000 கிலோ விளைவித்து முத-லிடம் பெற்றது.இதுபற்றி கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி கூறியதாவது: கொடிவேரி அணை பாசனத்துக்கு உட்பட்ட தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் ஆயக்கட்டு பகுதியில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த, 7ம் தேதி முதல் செயல்படுத்துகிறது. மத்திய அரசு நடப்-பாண்டு நாடு முழுவதும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார கொள்-முதல் விலையாக கிலோவுக்கு, 23.20 ரூபாய், மாநில அரசின் ஊக்கத்தொகை கிலோவுக்கு, 1.30 ரூபாய் சேர்த்து, 24.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில், அரசின் நேரடி நெல் கொள்-முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட, 71,660 டன் நெல்லில், 24,613 டன் கொடிவேரி அணை பாசனத்தின் தடப்-பள்ளி - அரக்கன்கோட்டை ஆயக்கட்டில் விளைந்தது. இதில் தமிழகத்திலேயே கொடிவேரி பாசனத்தில்தான், ஏக்கருக்கு சராசரி-யாக, 3,000 கிலோ விளைவித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
21-Oct-2024