உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3,192 பட்டதாரி ஆசிரியர்கள்பணி கோரி முதல்வரிடம் மனு

3,192 பட்டதாரி ஆசிரியர்கள்பணி கோரி முதல்வரிடம் மனு

ஈரோடு :ஈரோட்டில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிவு பெற்று, பணி நியமனத்துக்காக காத்துள்ளோர் மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர் பயிணிடம் நிரப்பப்படாமல் இருந்தது. ஆசிரியர் தேர்வாணையத்தால், 2023 அக்., 25ல் வெளியிடப்பட்ட டி.ஆர்.பி., நோட்டீஸ் மூலம், 'கிராஜூவேட் டீச்சர்ஸ், பிளாக் ரிசோர்ஸ் டீச்சர்ஸ் எஜூகேட்டர்ஸ்' பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்.,4ல் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,192 ஆசிரியர் தேர்வு பெற்று, சான்றிதழ் சரி பார்ப்பு நடந்து, உத்தேச தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும், பணி நியமன ஆணை வழங்க வேண்டும். பணி நியமன ஆணை வழங்கப்படாமல் எங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mohamedismail
டிச 22, 2024 12:33

இலவசமாக பெண்களுக்கு பஸ்ஸில் பயணம். இதில் பாதி கட்டணம் வசுல் செய்யலாம். கல் கலம் அலுவலர்களின் மெத்தன போக்கால் மாணவர் வருகையை அதிகமாக காட்டி பணியிடம் காலியாக உள்ளதை சரியான முறையில் இவைகள் ஒழேங்கு படுத்தல் மூலம் நிதி வசதிகளை பெருக்கி ஆ செலவுகளை குறைத்து ஆசிரியர் பணியிடங்கள் வழங்கலாம்


சமீபத்திய செய்தி