குறைதீர் கூட்டத்தில் 320 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டத்தில்320 மனுக்கள் ஏற்புஈரோடு, டிச. 10-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 320 மனுக்கள் பெறப்பட்டு, துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் மனுக்களை பெற்றனர்.