உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீமான் மீது 34 புகார்; ஒன்றில் மட்டும் வழக்கு

சீமான் மீது 34 புகார்; ஒன்றில் மட்டும் வழக்கு

ஈரோடு: ஈ.வெ.ரா., குறித்து பேசியது தொடர்பாக சீமான் மீது, ஈரோடு மாவட்டத்தில், 34 புகார் மனுக்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில், ஒரே ஒரு புகார் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈ.வெ.ரா., குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி, 34 புகார் மனுக்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்பட்டுள்ளன. இதில், பவானி போலீஸ் ஸ்டேஷனில் மட்டும், ஒரே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ