உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 35 வயது டான்ஸ் மாஸ்டர்மயங்கி விழுந்து மரணம்

35 வயது டான்ஸ் மாஸ்டர்மயங்கி விழுந்து மரணம்

35 வயது டான்ஸ் மாஸ்டர்மயங்கி விழுந்து மரணம்அந்தியூர்:கோவை, கீரநத்தம், விநாயகர் வீதியை சேர்ந்தவர் நரேந்திரன், 35; டான்ஸ் மாஸ்டர். அந்தியூர் அருகே முனியப்பன்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளியில் வரும், 23ம் தேதி ஆண்டு விழா நடக்கிறது. இதற்காக பள்ளி மாணவர்களுக்கு, நடன பயிற்சியளிக்க நரேந்திரன் வந்தார். நேற்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி, மாத்திரை வாங்கி வர சென்றார். பள்ளியிலிருந்து வெளியே வந்து பைக்கில் ஏறியவர் மயங்கி விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி