உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடு திருடிய 4 பேர் கைது

மாடு திருடிய 4 பேர் கைது

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே பொன்பரப்பியை சேர்ந்தவர் பிரதீப் குழந்தைவேல், 33; இவருக்கு சொந்தமாக ஓலப்பாளையம் அருகே நெடுங்காட்டு தோட்டத்தில், 25 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு, 50 செம்மறி ஆடுகள், 13 மாடுகளை வளர்த்து வரு-கின்றார். கடந்த வாரம் நான்கு மாடுகள் திருட்டு போனது. இதுகு-றித்து வெள்ளகோவில் போலீசில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக ஆனைமலை அருகேயுள்ள திவான் சாலை-புதுார் மகாபிரபு, 23, சந்துரு, 21, ஜெயசூர்யா, 19; வெள்ள-கோவில், தென்னகரப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், 42, என நான்கு பேரை கைது செய்தனர். திருடப்பட்ட மாடுகளை கைப்-பற்றி, திருட்டுக்கு பயன்படுத்திய மினி வேன், பைக்கை பறி-முதல் செய்தனர். நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி