உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4 பேருக்கு நாய்க்கடி பவானியில் அதிர்ச்சி

4 பேருக்கு நாய்க்கடி பவானியில் அதிர்ச்சி

பவானி:பவானி நகராட்சி, 15 வது வார்டு வாரச்சந்தை ரோடு பகுதியில், ஒரு தெரு நாய் நேற்று காலை, இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்களை திடீரென கடித்தது. காயமடைந்த நான்கு பேரும், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையறிந்த நகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம், தெருநாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் இன்று காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, வெறி நாய்க்கடி தடுப்பூசி முகாம், பவானி கால்நடை மருத்துவமனையில் நடக்கிறது. இதில் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் நகராட்சி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !