உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 400 கி., சந்தனக்கட்டை வேனுடன் பறிமுதல்

400 கி., சந்தனக்கட்டை வேனுடன் பறிமுதல்

டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் பகுதியில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு வேனில் சோதனை செய்தனர். லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்த ஜெய்னுள் அபுதீன், 49, கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷாக், 50, இருந்தனர். சோதனை செய்ததில், 400 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டை, சிறிய துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் வைக்கப்பட்டிருந்தது. மீன் பெட்டி மற்றும் காலி அட்டை பெட்டிகளை வைத்து, அதன் நடுவில் வைத்து கடத்தி செல்வது தெரிய வந்தது. வேனுடன் இருவரையும் பிடித்து, சத்தி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை